கனடா செய்திகள்

அமெரிக்க அதிபரால் கனடிய டொலரில் பாதிப்பு

12 Jun 2018

நேற்று திங்கள் கிழமை காலை அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை தாக்கி கருத்து வெளியிட்டதால் தொடர்ந்து கனடிய டொலர் குறைந்து வருகின்றது.

உச்சி மகாநாட்டின் இறுதி செய்தியாளர் மகாநாட்டில் தனது சுங்கத் தீர்வை குறித்த ட்ரூடோவின் விமர்சனத்தால் தான் கூனிக்குறுகி விட்டதாக ஞாயிற்றுகிழமை ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ருவிட்டர் செய்தி ஒன்றில் ட்ரம்ப் ட்ரூடோ "நேர்மையற்ற" மற்றும் "பலவீனமானவர்" என அவமதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ட்ரம்பின் மற்றொரு ஆலோசகரும் ஞாயிற்றுகிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சாடியுள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 77.15சதம் சராசரி மதிப்பாக இருந்த லூனி 76.87 யு.எஸ்.ஆக குறைந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்