கனடா செய்திகள்

அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து மேலதிக விபரங்களுக்காக காத்திருக்கும் கனடா

09 Jul 2017

பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பயணத்தடை உத்தரவு தொடர்பிலான மேலதிக தகவல்களுக்காக கனேடிய அரசு காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதியின் பயணத்தடை உத்தரவு பொருந்தும் எனினும் அது குறித்த மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மேற்படி ஆறு நாடுகளின் குடியுரிமையுடன் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் கனேடிய கடவுச்சீட்டுடன் பயணிக்கும் போது தடை உத்தரவால் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேவேளை இந்த ஆறு முஸ்லிம் நாடுகளை தமது பூர்வீகமாக கொண்ட கனேடிய நிரந்தர வதிவிட உரிமை உடையவர்கள் அமெரிக்க விசாவை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து மேலதிக விபரங்களுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்