உலகம் செய்திகள்

அமெரிக்காவை அச்சுறுத்தும் மர்ம நோய்

16 Feb 2017

எலியினால் பரவக்கக்கூடியதென சதேகிக்கப்படும் ஒரு வகை மர்ம நோய் காரணமாக, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் தலைநகரான நியுயோர்க் நகரிலுள்ள புரோம்ன்ஸ் என்ற இடத்திலேயே, 4 பேரை குறித்த மர்ம நோய் தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

குறித்த நோய் தொற்றாளர்களை பரிசோதித்த போது, எலி மூலம் மனிதனுக்கு பரவக்கூடிய லெப்டோ ஸ்பைரோசிஸ் வைரஸ்ஸை போன்ற புது விதமான வைரஸ் தாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் எலியின் சிறுநீர் மூலம் இந்த வைரஸ் தண்ணீரில் பரவி, அதன் பிறகு மனிதனை தாக்கி இருக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு குறித்த வகை வைரஸ் ஒரு மனிதனை தாக்கினால், அவர் மூலம் ஏனைய மனிதருக்கும், எளிதாக பரவி விடுமெனவும், மூக்கு, வாய், கண் மூலமாகவும் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மூலமாகவும் இந்நோய் பரவும் அபாயமுடையதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது குறித்த வைரஸ் நோயை தீர்க்க எந்த மருந்தும் இல்லை. ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பயன்படுத்தி குறித்த நோயை குணப்படுத்தி விடலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்