இலங்கை செய்திகள்

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடு

13 Mar 2018

கண்டியில் நடைபெற்ற  இனவாத வன்முறைகளுக்கு பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை என்றும், கடைகள், பள்ளிவாசல் என்பவற்றை தீ வைக்குமாறு தனது கணவர் அறிவிக்கவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 பொலிஸாரே தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தனர் எனவும்,. தற்பொழுது அனைவரும் தனது கணவர் மீது பழியைப் போட்டுவிட்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்