25 Jan 2023
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச பணியாளர்களுக்கு 25 ஆம் திகதியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணியாளர்களுக்கு 25 அல்லது 26 ஆம் திகதிகளிலும் சம்பளம் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
திறைசேரியில் நிதியின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.