சினிமா செய்திகள்

அத்துமீறி நுழைந்தால் கொல்லப்படுவீர்கள்.. மிரட்டும் கங்கனா ரனாவத்

18 Mar 2023

தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில், "வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam