இலங்கை செய்திகள்

அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை -சம்பந்தன்

14 Sep 2018

மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற திரியாய்  வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலிருந்து வேறு மக்களை கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், அதற்கு தாம் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிப்பதாகவும் கூறினார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV