இலங்கை செய்திகள்

அத்துமீறிய இந்திய மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்

25 Nov 2022

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தை கடற்படையினர் வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.

இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam