கனடா செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டிப்புரண்டு சண்டை

14 Sep 2023

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு பேர் கட்டி புரண்டு மோதிக்கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு பேர் வாகனத்தை விட்டு இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை மற்றுமொருவர் காணொளியாக பதிவிட்டுள்ளார்.

வீதிப்போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றால் உடனடியாக அது குறித்து பொலிசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam