உலகம் செய்திகள்

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் :புதின்

06 Dec 2017

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 1999-ம் ஆண்டு முதல் ரஷிய அதிபராக பதவி வகித்து வருகிறார். ரஷ்யாவில் அடுத்த ஆண்டு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல்  நடைபெற உள்ளது. 

இந்நிலையில் மாஸ்கோவில்  நிஸ்னி நோவ்கரோடில் உள்ள தொழிற்சாலையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் புதின் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில்,

எனது ஆட்சியை 2024-வரை நீட்டிக்க நான் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு  வேட்பு மனுவை தாக்கல் செய்வேன். மார்ச் மாதம் நாட்டில் புதிய ஆறு வருட ஆட்சி நிலை நாட்டப்படும்.

இவ்வாறு தொழிலாளர்கள் மத்தியில் புதின் பேசினார்.

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV