சினிமா செய்திகள்

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்த விஜய்

23 Jun 2022

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. குழந்தைகள் சூழ விஜய் படுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் பைக்கில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam