கனடா செய்திகள்

அடமானக் கடனை புதுப்பிப்பவர்களுக்கு சிக்கல்

15 May 2018

வங்கிகள் அடமான கடனை புதுப்பிக்கும் போது, வட்டி விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. "stress test" என்ற பெயரில் இது கடந்த ஜனவரி மாதம் ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலமாக கடன் வாங்கியவர்கள் திரும்பச் செலுத்தும் திறனை சோதிக்க உள்ளனர். ஒருவேளை இந்த சோதனையில் தேர்ச்சி பெறாமல் போய்விட்டால், மீண்டும் கடன் கிடைப்பது அரிதாகிவிடும். இதனால் சிறிய அடமானக் கடன் வழங்குவோரையோ அல்லது விலை மலிவான வீடுகளையோ தேர்வு செய்யவேண்டி வரும்.

இந்த புதிய முறையினால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டதாக அடமானக் கடன்  வழங்கும் தரகர்கள் கூறுகின்றனர்.

அடமானக் கடனை புதுப்பிக்க வரும் பொழுது உயர்ந்த வட்டி விகிதத்தின் காரணமாக திரும்ப செலுத்துவது கடினமாகிறது. கடன் வழங்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறுவதும் அவ்வளவு சுலபமல்ல. இதனால் மீண்டும் மீண்டும் உயர்ந்த வட்டியையே திரும்ப செலுத்த வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்