சினிமா செய்திகள்

அஜித்தை பாராட்டிய ரஜினிகாந்த்

14 Aug 2019

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்‘ படத்தின் ரீமேக். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 8-ந்தேதி வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்த வசூல் சுமார் ரூ.45 கோடியை தாண்டியுள்ளது.

இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இருவருக்கும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. ‘ரொம்ப நல்ல படம். சரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க. ஹாட்ஸ் ஆப்’ என்று ரஜினி தெரிவித்ததாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அஜித்தின் அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் எச்.வினோத். இதன் படப்பூஜை ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்