சினிமா செய்திகள்

அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்

08 Mar 2018

`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார்.

மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டீசர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அதில் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்