இந்தியா செய்திகள்

அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு

15 Sep 2021

அசாமின் நிமதி காட் பகுதியருகே, பிரம்மபுத்திரா ஆற்றில் சென்று கொண்டிருந்த தனியார் படகு ஒன்று 96 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  அந்த படகு, மஜுலி என்ற இடத்தில் அரசின் திரிப்காய் என்ற
படகு மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  89 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அசாம் பேரிடர் மேலாண் படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதுபற்றி அசாம் பேரிடர் மேலாண் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam