இலங்கை செய்திகள்

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முறைப்பாடு

16 May 2018

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

“எதிர்வரும் 1ஆ8ம் திகதி தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவிருக்கின்றது. அதனை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குலுகல்லே ஸ்ரீ ஜீனாநந்த தேரர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது  இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்