கனடா செய்திகள்

 பேர்ளிங்டனின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூதாட்டி காயம்

11 Feb 2018

நேற்று முற்பகல் பத்து மணியளவில் பேர்ளிங்டனின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் 2ஆம் தளத்தில் இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு அந்த வீட்டினுள் சிக்குண்டிருந்த 93 வயது மூதாட்டியை மீட்டதாகவும், எனினும் உயிராபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் இருந்த மேலும் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அவசர மருத்துவப் பிரிவினரால் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது மூச்சுத் திணறலுக்கு உள்ளான அதிகாரிகள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்