கனடா செய்திகள்

 கனடாவின் தபால் சேவையாளர் சங்கம் பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகின்றது

13 Sep 2018

எதிர்வரும் 26ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாக கனடாவின் தபால் அலுவலக சங்கம் அறிவித்துள்ளது.

வேலைப்பழு மற்றும் சம்பள விவகாரங்களுக்காக பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்கான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கை இடம்பெற்றது. கடந்த ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் இம்மாதம் 9ஆம் திகதி வரை இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றது. கனடா முழுவதுமுள்ள தபால் துறைப் பணியாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் 95.6 சதவீத வாக்குகள் ஆதரவாக  வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 26ஆம் திகதி கனடா முழுவதும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பணிப்புறக்கணிப்பினையிட்டு பொதுமக்களுக்கு தபால் சேவை தடைப்படுமென தபால் சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

தபால் துறையில் பணிபுரியும் அலுவலகர்களுக்கு அதிகமான வேலைப்பழு காணப்படுவதாகவும், குறித்த வேலைகளுக்கு ஏற்றாற்போல சம்பளத்தினை அவர்கள் பெறுவதில்லை என்றும் தபால் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,  தபால்களைக் கொண்டு சேர்க்கும் அதிகமான பணியாளர்கள் கால்நடையாகவே செல்வதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்