இலங்கை செய்திகள்

 இணையத்தள தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் - மனோ கணேசன்

15 May 2019

நாட்டில் சில இடங்களில் இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்காக இணையத்தள தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமென, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஏற்றவகையில், நாட்டை கொண்டு செல்ல இடமளிக்கப்படாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தேசிய பிரச்சினையே அன்றி பச்சை, சிவப்பு, நீலப் பிரச்சினை அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் தவறானத் தகவல்கள் வழங்கப்பட்டு, மக்களை தவறாக வழிநடத்தி, இதன்மூலம் பாடசாலை மற்றும் சகல பிரிவினரையும் அழிப்பதற்கு இடமளிக்கப்படாதென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்